Monday, April 13, 2009

சுவிஸ் பாங்கில் எழுபது லட்சம் கோடி கருப்பு பணம்70 லட்சம் கோடி ரூபான்னா எவ்வளவு...?
அதெல்லாம் 1000 ரூபாய்க்கு மேலப்பா...!!! என்று காமெடி செய்யாமல்..
70 லட்சம் கோடிக்கு எத்தனை சைபர்....??? என்று கணக்கு போடாமல்.. கொஞ்சம் சீரியஸ்-ஆ படிங்க நண்பர்களே...

ஆம், எழுபது லட்சம் கோடி இந்திய ரூபாய்கள் சுவிஸ் பாங்கில் அடைந்து கிடக்கிறது.இங்கு கணக்கு வைத்துள்ள 180 நாடுகளில் இந்தியாவின் தொகை தான் மிகப்பெரிய தொகை.கருப்பு பணத்தில் இந்தியா தன் சாதனையை காட்டிஇருப்பது மிக தெளிவாக விளங்குகிறது.

இது தொடர்பாக ஜெர்மன் அரசு இந்திய அரசாங்கத்திற்கு ஒரு கடிதம் எழுதியது, அதாவது "இந்திய அரசு கேட்டுக்கொண்டால் சுவிஸ் பாங்கில் கணக்கு வைத்திருக்கும் இந்தியர் அனைவரது முழு விவரங்களையும் தருவதற்கு நாங்கள் தயாராக உள்ளோம்" என்பதுதான்.

ஜெர்மன் அரசு எழுதிய இந்த கடிதத்தோடு 22-5-08 அன்று ஒரு செய்தியை வெளிஇட்டது Times of India நாளிதழ்.

1947 முதல் 2008 வரை இந்தியாவில் இருந்து பெரும் தொகை சுவிஸ் பாங்கில் சென்று தூங்கி கிடக்கிறது.ஜெர்மன் அரசு கடிதம் எழுதிய பிறகும் இந்திய அரசு எந்த ஒரு அதிகாரபூர்வமான விசாரணையும் எடுக்கவில்லை என்பது மிகவும் வெட்க கேடான ஒரு செய்தி(?) ஏனென்றால் இதில் பெரும்பான்மையான முதலைகள் அரசியல்வாதிகள்....(அப்புறம் எப்படி?).இந்த முதலைகள் விழுங்கும் அனைத்து பணமும் மக்களாகிய நமது உதிரம்.

இந்த பெரும் தொகையின் வைத்து கொண்டு இப்பொழுது இருக்கும் நமது வெளி நாட்டு கடனைபோல் 13 மடங்கு கடன்களை அடைக்கலாம்.வருடத்திற்கு ஒரு முறை budget என்று எதுவும் போட வேண்டாம், இந்த பணத்தில் இருந்து வரும் வட்டியே போதும்,மக்கள் வரி என்று எதுவும் கட்ட வேண்டியதில்லை, மாறாக ஒரு குடும்பத்திற்கு 1 லட்சம் வீதம் சுமார் 45 கோடி ஏழை குடும்பங்களுக்கு கொடுக்கலாம்.

சிறிது யோசித்து பாருங்கள் சுவிஸ் பாங்கில் மட்டுமே 70 லட்சம் கோடி இருந்தால், மீதமுள்ள 69 பாங்குகளில் (உலகில் மொத்தம் 70 பாங்குகளில் இது போன்ற வசதி உள்ளது) எவ்வளவு தொகை இருக்கும்?.

எத்தனை இந்தியர்களின் பணத்தை அபகரித்து இருப்பார்கள்?.

இந்த வங்கிகளில் கணக்கு வைத்திருப்பவர்களில் யாரேனும் ஒருவர் மட்டும் இறந்து விட்டால் அந்த முழு தொகையும் என்ன ஆகும்?. சந்தேகமே வேண்டாம் அனைத்தும் அந்த வங்கிக்கே உரிமை ஆகிவிடும்(!).

இந்த பண முதலைகளுக்கு *கர்மா* என்றால் என்னவென்று தெரியாதோ? இப்படி ஊழலினால் வரும் செல்வத்தை வைத்து அவர்கள் எப்படி கூச்சம் இல்லாமல் வாழ முடிகிறதோ?

இந்த பணம் அனைத்தும் நமது வியர்வை....!!, நமது உழைப்பு...!!,நமது உதிரம்..!!
சிந்தியுங்கள் இவை அனைத்தும் எங்கு இருக்க வேண்டியவை ? நம்மிடமா..?? அல்லது சுவிஸ் வங்கியிலா ..???.

தாத்தா சொன்ன கதை...நம் கதையில் வரும் நாயகன் அழகன் என்று சொல்ல முடியாவிட்டாலும் புத்திசாலி. அவன் தன் வாழ்க்கை துணைக்காக சரியானதொரு பெண்ணை தேடி கொண்டிருந்தான்.தனக்கு வரப்போகும் மனைவி தன்னை போல் ஒரு அறிவாளியாக இருக்க வேண்டும் என்பது அவனது விருப்பம்.
ஒருநாள் பெண் பார்ப்பதற்க்காக அருகில் இருந்த ஊருக்குச்சென்றான்...

அந்தப்பெண் மிக அழகாக இருந்தாள்...

அவள் கண்கள் மீன்கள்..!!

அவள் கண்ணம் தேன் கிண்ணம்..!!

அவள் இதழ்கள் ஆரஞ்சு சுளைகள்..!!

இருக்கிறதா? இல்லையா? என்று சந்தேகம் கொள்ளும் அளவுக்கு தொட்டால் ஒடிந்து விடும் நிலையில் இருந்தது அவளது இடை...!!


நிற்க..


மொத்தத்தில் அவள் ஒரு பூலோக ரம்பை....!!!


இப்படிப்பட்ட ஒரு பேரழகியை கண்ட யார் தான் சொக்கி போக மாட்டார்கள்,ஆம் நம் கதாநாயகனும் அப்படித்தானே இருக்கிறான்...!!!


ஆனால் அவன் விரும்பியதோ ஒரு புத்திசாலி பெண்ணை,அதனால்

அவள் புத்திசலிதானா என்பதை தெரிந்து கொள்ள அவளிடம் சில கேள்விகள் கேட்க விருப்பப்பட்டான்...


ஆனால் நடந்ததோ வேறு..இவன் கேள்வி கேட்பதற்குள் அவள் தன் கேள்விகளை கேட்க ஆரம்பித்தாள்...


(ஒருவேளை அவளும் அவனை போலவே தனக்கு வரப்போகும் கணவன் ஒரு புத்திசாலியாக இருக்கவேண்டும் என்று நினைத்து இருக்கலாம்.)


ஆனால் அவன் தான் புத்திசாலி ஆயிற்றே அவனுக்கு தெரியாத பதிலா..!! அதனால் அவனும் அவள் கேள்விகளுக்கு பதில் கூற தயார் ஆனான்..

பாவம் என்ன நடக்கப்போகிறது என்றே தெரியாமல் ..!!!

ஆனால் அவளோ சில புதிர் கேள்விகளை அவன் முன் வைத்தாள், இக்கேள்விகளுக்கு பதில் கூறினால் நம் திருமணம் நடப்பது உறுதி என்றாள்(?).


கேள்விகள் ஒவ்வொன்றையும் கேட்க கேட்க அவனுக்கு தலை மெதுவாக சுற்ற ஆரம்பித்தது...ஒரு கேள்விக்கும் விடை கூறமுடியவில்லை.அதெப்படி விடை கூறாமல் விடுவது அவனோ கதநாயகன் ஆயிற்றே.


அதனால் இரண்டு நாட்கள் அவகாசம் கேட்டான்..(?)


அவகாசமும் வழங்கப்பட்டது...கேள்விகளுக்கான பதிலை தேடினான்..விரைவில் அதற்கான பதில்களும் கிடைத்தது.உடனடியாக அவளை நோக்கி ஓடினான்..நிற்க..அந்த கேள்விகள் தான் என்ன..??உலகில் எந்த பசுவிலிருந்தும் கறக்க முடியாத பால் எது?


உலகில் எந்த உழவனாலும் விதைக்க முடியாத நாத்து எது?உலகில் எந்த ஒரு தறியிலும் நெய்ய முடியாத பட்டு எது?உலகில் எவராலும் சுவைக்க முடியாத தேன் எது?உலகில் எவராலும் திரிக்க முடியாத திரி எது?இவைதான் அந்த கேள்விகள்..தான் சிரமப்பட்டு அரித்த பதில்களை அவளிடம் கூற மிக ஆர்வமுடன் சென்றான் அவன்..அவளோ வீட்டின் உள்ள இருந்தாள்..இவன் வெளியில் இருந்த படியே பதில்களை கூற ஆரம்பித்தான்..அவளும் பதில்களை கேட்க தயாரானால்..


அவன் பதில் கூறுகிறான்...
பெண்ணே நீ அப்பால் நான் இப்பால் நடுவில் தாழ்பாள்...நேத்து முந்தா நாத்து..உன்மேல் ஆசைப்பட்டு வந்தேன்..எந்திரி பெண்ணே எந்திரி...இவைதான் அவன் கூறிய பதில்கள்...அப்புறம் என்ன...கல்யாணந்தான்....


சுபம்...